தமிழ் குளிர்காய் யின் அர்த்தம்

குளிர்காய்

வினைச்சொல்-காய, -காய்ந்து

  • 1

    (குளிரைப் போக்கிக்கொள்ள எரியும் நெருப்புக்கு அல்லது கணப்புக்கு அருகில் உட்கார்ந்து) உடம்பைச் சூடுபடுத்திக்கொள்ளுதல்.

    ‘பனை ஓலைகளை எரித்துக் குளிர்காய்ந்துகொண்டிருந்தோம்’

  • 2

    (மற்றவர் கஷ்டத்தைப் பயன்படுத்தி) ஆதாயம் தேடுதல்.

    ‘பங்காளிகள் சண்டை போட்டுக்கொண்டால் எதிரி அதில் குளிர்காய்வான்’