தமிழ் குழந்தை யின் அர்த்தம்

குழந்தை

பெயர்ச்சொல்

 • 1

  தாயின் வயிற்றில் இருக்கும் அல்லது அண்மையில் பிறந்த பிள்ளை.

  ‘‘வயிற்றில் குழந்தை உதைக்கிறது’ என்றாள் என் மனைவி’
  ‘குழந்தைக்கு நிறைய முடி இருக்கிறது’

 • 2

  (ஒரு தம்பதியினரின்) மகன் அல்லது மகள்; வாரிசு.

  ‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?’
  ‘குழந்தைகள் இல்லாததால் தன் சொத்துகள் அனைத்தையும் அவர் கோயிலுக்கு எழுதிவைத்துவிட்டார்’