தமிழ் குழாய் யின் அர்த்தம்

குழாய்

பெயர்ச்சொல்

 • 1

  உள்ளீடு அற்றதும் உருளை வடிவில் உள்ளதும் பொருள்களைத் தன்வழி கடத்துவதற்குப் பயன்படுவதுமான நீண்ட பொருள்.

  ‘மின்கம்பி செல்லும் குழாய்’
  ‘ரப்பர் குழாய்’
  ‘மூங்கில் குழாய்’

 • 2

  (வீடு முதலியவற்றில்) நீர் வருவதற்கான கருவி.

  ‘குழாயைத் திருகியதும் தண்ணீர் கொட்டும்’
  ‘குழாயின் கைப்பிடி உடைந்துவிட்டது’

 • 3

  காண்க: குழல்