தமிழ் கூண்டோடு யின் அர்த்தம்

கூண்டோடு

வினையடை

  • 1

    (குறிப்பிடப்படும் சூழலில்) தொடர்புடைய அனைவரும்; பூண்டோடு.

    ‘சாதிச் சண்டையில் கூண்டோடு அழிந்த குடும்பங்களும் உண்டு’
    ‘தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்துக் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றப்பட்டனர்’
    ‘நிர்வாகம் உற்பத்திப் பிரிவில் இருந்த தொழிலாளர்களைக் கூண்டோடு வேலையை விட்டு நீக்கிவிட்டது’