தமிழ் கூற்று யின் அர்த்தம்

கூற்று

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு (ஒருவர்) சொன்னது; (ஒருவரால்) கூறப்பட்டது.

  ‘உன் கூற்றுப்படி எதுவும் நடக்கவில்லை’
  ‘நீ என் கூற்றை நம்ப மறுக்கிறாய்’

 • 2

  உயர் வழக்கு ஒன்றைப் பற்றிய தன் கருத்தை வாய்மொழியாகவோ எழுத்து வடிவிலோ வெளிப்படுத்தியது.

  ‘இது தலைவியின் கூற்றாக அமைந்த பாடல்’
  ‘அவருடைய நான்கு கூற்றுகளில் முதல் கூற்றை மட்டும் என்னால் ஏற்க முடியாது’

 • 3

  கணிதம்
  நிரூபிக்கப்பட வேண்டிய அல்லது மறுக்கப்பட வேண்டிய கருதுகோள்.