தமிழ் கெஞ்சல் யின் அர்த்தம்

கெஞ்சல்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    ஒன்றைச் செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்று இரக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கேட்கும் செயல்.

    ‘உன் கெஞ்சலுக்கு மசிகிற ஆள் நான் இல்லை’
    ‘என்னை வேலையிலிருந்து நீக்கிவிடாதீர்கள் என்ற அவனது கெஞ்சல் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது’
    ‘அவளுடைய கெஞ்சல்களும் கொஞ்சல்களும் அவனுடைய மனத் திடத்தைச் சோதித்தன’