தமிழ் கொச்சை யின் அர்த்தம்

கொச்சை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  முறைப்படுத்தப்பட்ட எழுத்தின் தன்மைகளைக் கொண்டிருக்காத மொழியின் வகை.

  ‘அன்றாடம் மக்கள் பேசும் கொச்சைத் தமிழை அந்த நடிகர் கற்றுக்கொண்டு படத்தில் பேசி நடித்தார்’
  ‘இவர் கொச்சை நடையில் எழுதுகிறார்’

 • 2

  ஆபாசம்.

  ‘அரைகுறை ஆடைகளுடன் கொச்சையான நடனக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுகின்றன’