தமிழ் கொஞ்சல் யின் அர்த்தம்

கொஞ்சல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஆசையை அல்லது அன்பை வெளிப்படுத்தும்போது எழுப்பப்படும் ஒலிகளும் சொல்லப்படும் சொற்களும்/இவற்றோடு கூடிய செய்கைகள்.

    ‘‘கடற்கரைக்கு அழைத்துப் போகிறீர்களா’ என்று மகள் கொஞ்சலாகக் கேட்டதும் ‘சரி’ என்றார்’
    ‘நம் திருமணம் எப்போது என்று கொஞ்சலான குரலில் கேட்டான்’
    ‘தூங்கிக்கொண்டிருக்கும் பிள்ளையிடம் உனக்கு என்ன கொஞ்சல்?’