தமிழ் கொடும்பாவி யின் அர்த்தம்

கொடும்பாவி

பெயர்ச்சொல்

  • 1

    (மழை இல்லாத குறை, பஞ்சம் முதலியவற்றை நீக்குவதற்கான சடங்காக) வைக்கோலால் செய்து தெருவில் இழுத்துச்சென்று எரிக்கும் உருவம்/(அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்களைப் போன்று) வைக்கோலால் அல்லது அட்டையால் செய்து தெருவில் இழுத்துச்சென்று எரிக்கும் உருவம்.

    ‘சென்னையில் மழை வேண்டிக் கொடும்பாவி இழுத்தார்கள்’
    ‘இரு நாட்டுத் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன’