தமிழ் கொடை யின் அர்த்தம்

கொடை

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு நன்கொடை; பரிசு.

  ‘காடும் மலையும் இயற்கை நமக்குத் தந்த கொடை’
  உரு வழக்கு ‘இந்த அரிய நூல் தமிழுக்கு நம் பேராசிரியர் தந்த கொடை’

 • 2

  (தெய்வங்களுக்கு) உணவு முதலியவற்றைக் காணிக்கையாக்கிக் கொண்டாடும் விழா.

  ‘ஐயனார் கோயிலில் கொடை’