தமிழ் கொண்டாடு யின் அர்த்தம்

கொண்டாடு

வினைச்சொல்கொண்டாட, கொண்டாடி

 • 1

  (விழா, நிகழ்ச்சி போன்றவற்றை) சிறப்பாக அல்லது விமரிசையாக நடத்துதல்.

  ‘நாடு முழுதும் தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது’
  ‘தலைவரின் பிறந்தநாளை நேற்றுச் சிறப்பாகக் கொண்டாடினார்கள்’

 • 2

  புகழ்தல்; போற்றுதல்; சிறப்பித்தல்.

  ‘இவரை மக்கள் தெய்வமாகவே கொண்டாடுகிறார்கள்’
  ‘நம் நட்பைக் கொண்டாடும் விதமாக நான் இந்தச் சிறிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளேன்’
  ‘இயற்கையின் அற்புதங்களைக் கொண்டாடும் கவிதை’

 • 3

  (ஒருவர் மற்றவரோடு தனக்கு உறவு, நட்பு, உரிமை உண்டு என்று) காட்டிக்கொள்ளுதல்.

  ‘கையில் பணம் இருந்தால் சொந்தம் கொண்டாடுவார்கள்’
  ‘அப்பா இறந்தவுடன் சொத்துக்கு உரிமை கொண்டாட வந்துவிட்டான்’