தமிழ் கொண்டுபோ யின் அர்த்தம்

கொண்டுபோ

வினைச்சொல்-போக, -போய்

 • 1

  (ஒருவரை) அழைத்துச் செல்லுதல்; (ஒன்றை) எடுத்துச் செல்லுதல்.

  ‘மனைவியைக் கொண்டுபோய் அலுவலகத்தில் விட்டுவந்தான்’
  ‘வாடகை சைக்கிளைக் கொண்டுபோய்க் கடையில் கொடுத்துவிடு!’
  ‘காட்டிலிருந்து மரங்களை வெளியே கொண்டுபோக அனுமதி பெற வேண்டும்’

 • 2

  (கதை, திரைப்படம் முதலியவற்றின் ஓட்டத்தை) அமைத்தல்; (நிறுவனம், கட்சி முதலியவற்றை) நெறிப்படுத்துதல்.

  ‘ஆசிரியர் கதையை விறுவிறுப்பாகக் கொண்டுபோயிருக்கிறார்’
  ‘இடைவேளைக்குப் பிறகு படத்தை எப்படிக் கொண்டுபோவது என்று தெரியாமல் இயக்குநர் திணறியிருக்கிறார்’