தமிழ் கொண்டை யின் அர்த்தம்

கொண்டை

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் பெண்களின்) சுருட்டிய முடிக் கட்டு.

  ‘குதிரை வால்போல் கொண்டை’
  ‘நன்றாகத் தூக்கிச் சீவிக் கொண்டை போடு’

 • 2

  (சேவல், மயில் போன்ற சில பறவைகளின் தலையில்) பட்டையாக மேல்நோக்கி வளர்ந்திருக்கும் சதைப் பகுதி அல்லது முடி.

  ‘சேவலின் செந்நிறக் கொண்டை’

 • 3

  (ஆணி, பம்பரம் போன்றவற்றின்) தலைப்பகுதி.

 • 4

  வட்டார வழக்கு செடியின் அல்லது மரத்தின் உச்சி.

  ‘பூச்சி பருத்திச் செடியின் கொண்டையைத் தாக்குகிறது’