தமிழ் கொம்பன் யின் அர்த்தம்

கொம்பன்

பெயர்ச்சொல்

  • 1

    (அலட்சியமாகப் பேசும்போது) பலம் அல்லது அதிகாரம் படைத்தவன்/திறமை படைத்தவன்.

    ‘‘எந்தக் கொம்பனும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது’ என்ற பாவனை அவருடைய முகத்தில் தெரிந்தது’
    ‘நாம்தான் இந்தக் காரியத்தைச் செய்தோம் என்பதை எந்தக் கொம்பனும் கண்டுபிடிக்க முடியாது’