தமிழ் கொள்முதல் யின் அர்த்தம்

கொள்முதல்

பெயர்ச்சொல்

 • 1

  (உற்பத்தி, விற்பனை, சேவை முதலியவற்றுக்காகப் பொருள்களை) பெருமளவில் வாங்குதல்.

  ‘கைத்தறித் துணிகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன’
  ‘ஆயுதக் கொள்முதல்’
  ‘தொழிற்சாலைக்குத் தேவையான சரக்குகளைக் கொள்முதல் செய்ய அவர் வெளிநாடு சென்றிருக்கிறார்’
  ‘ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வது குறித்த அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது’