தமிழ் கொழி யின் அர்த்தம்

கொழி

வினைச்சொல்கொழிக்க, கொழித்து

 • 1

  (வளம், செழுமை முதலியவை) மிகுந்து காணப்படுதல்.

  ‘பசுமையும் செழுமையும் கொழிக்கும் வயல்கள்’
  ‘அவரிடம் பணம் கொழிக்கிறது’

 • 2

  (ஒருவர்) மேம்படுதல்; (ஒருவருடைய தொழில்) செழித்தல்.

  ‘இந்த நகரம் பஞ்சு வியாபாரிகள் கொழிக்கும் இடம்’

தமிழ் கொழி யின் அர்த்தம்

கொழி

வினைச்சொல்கொழிக்க, கொழித்து

 • 1

  (அரிசி, கேழ்வரகு முதலியவற்றிலிருந்து நொய், குறுணை முதலியவற்றைப் பிரித்து எடுப்பதற்கு) முறத்தால் புடைத்தல்.

  ‘அரை மூட்டை அரிசியைக் கொழிக்க அரை நாளா?’