தமிழ் கொழு யின் அர்த்தம்

கொழு

வினைச்சொல்கொழுக்க, கொழுத்து

 • 1

  (உடலில்) சதைப்பற்று மிகுதல்.

  ‘ஆட்டை நன்றாகக் கொழுக்கவைத்துப் பலி கொடுக்கப்போகிறார்கள்!’
  ‘கொழுத்த முயல் போல் இருக்கிறான்’
  உரு வழக்கு ‘ஏழைகளைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகள்’

 • 2

  திமிர் பிடித்தல்.

  ‘அவன் கொழுத்துத் திரிகிறான்’

 • 3

  (‘கொழுத்து’ என்னும் வடிவம் மட்டும்) அளவுக்கு அதிகமாதல்.

  ‘அவனிடம் பணம் கொழுத்துக்கிடக்கிறது’

தமிழ் கொழு யின் அர்த்தம்

கொழு

பெயர்ச்சொல்

 • 1

  கலப்பையில் (மண்ணைக் கிளறும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்) கூரான இரும்புப் பட்டை.