தமிழ் கொழுப்பு யின் அர்த்தம்

கொழுப்பு

பெயர்ச்சொல்-ஆன, -ஆக

 • 1

  வெண்ணெய், இறைச்சி, தாவர வித்துகள் போன்றவற்றில் அடங்கியிருக்கும் ஓர் ஊட்டச் சத்து.

  ‘குழந்தைகளுக்குக் கொழுப்பு நிறைந்த உணவு தேவை’

 • 2

  மிருகங்கள், தாவரங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணெய்ச் சத்து மிகுந்த பொருள்.

  ‘கொழுப்பு இல்லாத கறி போடச் சொன்னால் கொழுப்பையும் சேர்த்துப் போட்டுவிட்டான்’
  ‘தாவரக் கொழுப்பால் உடம்புக்கு அதிகம் தீங்கு இல்லை’

 • 3

  மனிதர்களின், விலங்குகளின் தோலுக்கு அடியில் அல்லது இரத்தக் குழாயில் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் குழகுழப்பாகக் காணப்படுவது.

  ‘உடலில் அதிகப்படியாகச் சேரும் கொழுப்பு அடிவயிற்றுப் பகுதியில் சேர்கிறது’
  ‘இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாயில் படியும் கொழுப்பே மாரடைப்புக்குக் காரணமாகிறது’

 • 4

  சதைப்பற்று மிகுந்தது; திரட்சி.

  ‘கொழுப்பான கன்னம்’

 • 5

  (உடம்பில் கொழுப்பு அதிகமாவதால் ஏற்படுவதாகக் கருதப்படும்) திமிர்.

  ‘‘எனக்குப் புத்தி சொல்ல நீ யார்?’ என்றான் கொழுப்பாக’