தமிழ் கேளிக்கை யின் அர்த்தம்

கேளிக்கை

பெயர்ச்சொல்

  • 1

    (உல்லாசமாக இருக்க உதவும் இசை, திரைப்படம் போன்ற) பொழுதுபோக்கு.

    ‘கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது மனஇறுக்கத்தைக் குறைக்கும்’
    ‘விளையாட்டும் கேளிக்கையுமாக விடுமுறை கழிந்தது’
    ‘அவர் ஆடம்பரங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் செலவழித்தே தன் சொத்தை இழந்தார்’