தமிழ் கோடிட்ட யின் அர்த்தம்

கோடிட்ட

பெயரடை

  • 1

    (தேர்வுத்தாள், பயிற்சிப் பாடம் ஆகியவற்றில் மாணவர் விடை எழுதுவதற்காகக் கேள்வியில்) கோடுபோட்டுக் காலியாக விடப்பட்ட.

    ‘கோடிட்ட இடங்களை நிரப்புக!’

  • 2

    (காசோலை, வரைவோலை, அஞ்சல் ஆணை முதலியவற்றின் இடது பக்க மேல்முனையில்) குறுக்குவாட்டில் இரு கோடுகள் இழுத்து அடையாளமிட்ட.

    ‘கடிதத்துடன் கோடிட்ட வரைவோலையை இணைத்திருக்கிறேன்’