தமிழ் கோபுரம் யின் அர்த்தம்

கோபுரம்

பெயர்ச்சொல்

 • 1

  அடிப்பக்கம் அகன்றும் மேல் பகுதி குறுகியும் பக்கங்களில் சிற்ப வேலைப்பாடு கொண்டதாகவும் (கோயில் நுழைவாயிலின் மேல்) அமைக்கப்படும் உயர்ந்த கட்டடப் பகுதி.

 • 2

  (வசிப்பதற்கோ பணிபுரிவதற்கோ அல்லாத) உயரமான கட்டடம்.

  ‘பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம்’

 • 3

  ஒலி, ஒளி அலைகளைச் சமிக்ஞையாக மாற்றி செயற்கைக்கோளுக்கு அனுப்பவும் அல்லது செயற்கைக்கோளிலிருந்து வரும் சமிக்ஞைகளைப் பெறவும் உதவும் உலோகக் கம்பிகளால் ஆன உயர்ந்த அமைப்பு.

  ‘தொலைக்காட்சிக் கோபுரம்’