தமிழ் கைக்கூலி யின் அர்த்தம்

கைக்கூலி

பெயர்ச்சொல்

  • 1

    அதிகாரம், பணம், சலுகைகள் போன்றவற்றுக்காகப் பிறருக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து அவர் சார்பாகவே நடந்துகொள்பவர்.

    ‘ஆங்கிலேயரின் கைக்கூலியாக இருந்தவர்கள் பலர்’
    ‘பதவி உயர்வுக்கு ஆசைப்பட்டு அவன் மேலதிகாரியின் கைக்கூலி ஆகிவிட்டான்’