தமிழ் கைக்கொள் யின் அர்த்தம்

கைக்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (பயன் கருதி) மேற்கொள்ளுதல்; (பழக்கமாக) ஏற்றல்.

  ‘அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைக்கொண்டுதான் சர்வாதிகாரிகள் நாட்டை ஆள்கிறார்கள்’
  ‘கடுமையான பயிற்சிகளைக் கைக்கொள்வதன் மூலமே யோகத்தைப் பயில முடியும்’

 • 2

  உயர் வழக்கு கடைப்பிடித்தல்; பின்பற்றுதல்.

  ‘தலைவர்கள் பொதுவாழ்வில் தூய்மையைக் கைக்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’