தமிழ் கைநீளம் யின் அர்த்தம்

கைநீளம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவருடைய) திருடும் குணம்.

    ‘அவளுக்குக் கைநீளம் என்று தெரிந்திருந்தும் நகைகளை ஏன் வெளியில் வைத்தாய்?’

  • 2

    (கோபத்தில் யோசிக்காமல் ஒருவரை) அடித்துவிடும் குணம்.

    ‘நீ சொல்வதைக் கேட்கவில்லை என்பதற்காக அவனை அடிக்கப்போகிறாயே, உனக்குக் கைநீளம்தான்’