தமிழ் கைப்பக்குவம் யின் அர்த்தம்

கைப்பக்குவம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (உணவு, மருந்து) பதமாகத் தயாரிப்பதில் ஒருவருக்குள்ள திறமை.

  ‘மருந்தாகட்டும், சமையலாகட்டும், அம்மாவின் கைப்பக்குவம் யாருக்கும் வராது’

 • 2

  வீட்டிலேயே மருந்து தயாரித்துப் பயன்படுத்தும் முறை.

  ‘அஜீரணம் என்று நினைத்து இரண்டு நாளாக வீட்டிலேயே கைப்பக்குவமாக வைத்தியம் பார்க்கப்பட்டது’
  ‘சிலர் கைப்பக்குவமாகச் செய்துபார்த்து குணமாகவில்லை என்றால்தான் மருத்துவமனைக்கே வருகிறார்கள்’
  ‘கைப்பக்குவமாக என்னென்னவோ செய்துபார்த்தும் வாந்தி நிற்கவில்லை’