தமிழ் கையளி யின் அர்த்தம்

கையளி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

  • 1

    ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு என்ற முறையில் தருதல்.

    ‘சைவ சமயக் கல்வி குருசீட முறையில் கையளிக்கப்பட்டுவந்திருக்கிறது’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) ஒப்படைத்தல்.

    ‘போராளிகள் ஆயுதங்களைக் கையளிக்க மறுத்துவிட்டனர்’