தமிழ் கையேடு யின் அர்த்தம்

கையேடு

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு துறையில் பணிபுரிவோருக்குப் பயன்படும் வகையில்) செயல்முறைகளைக் கூறும் சிறிய நூல்.

  ‘சுகாதாரப் பணியாளர்களுக்கான விளக்கக் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன’
  ‘இந்த நடைக் கையேடு தற்காலத் தமிழை எழுதுவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியது’

 • 2

  அன்றாட நிகழ்ச்சிகளைக் குறித்துவைத்துக்கொள்ள உதவும் சிறிய குறிப்பேடு.

 • 3

  (தேர்வு எழுதுபவர்களுக்குப் பயன்படும் வகையில்) வினா விடைகளைக் கொண்ட நூல்.