தமிழ் கையை எதிர்பார் யின் அர்த்தம்

கையை எதிர்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    (பிறரை) நம்பியிருத்தல்.

    ‘இன்னும் எத்தனை நாள் அப்பாவின் கையை எதிர்பார்த்துக்கொண்டிருப்பது? உனக்கென்று ஒரு வேலை வேண்டாமா?’
    ‘யாருடைய கையை எதிர்பார்த்தும் நான் இந்தக் காரியத்தில் இறங்கவில்லை’
    ‘பாவம், வயதான காலத்தில் பிள்ளைகளின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டிருக்க வேண்டாம்’