தமிழ் கைவசம் யின் அர்த்தம்

கைவசம்

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட சமயத்தில் ஒருவரின்) வசம் இருப்பது.

    ‘கைவசம் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்?’
    ‘ஓவியத்தைப் பற்றிய புத்தகங்கள் கைவசம் இல்லை’
    ‘அவர்கள் கைவசம் ஏராளமான ஆயுதங்கள் இருந்ததாகக் காவல்துறையினர் கூறினர்’