கொடுக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடுக்கு1கொடுக்கு2

கொடுக்கு1

வினைச்சொல்கொடுக்க, கொடுக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (வேட்டி, லுங்கி போன்றவற்றை) தார்ப்பாய்ச்சிக் கட்டுதல்.

கொடுக்கு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கொடுக்கு1கொடுக்கு2

கொடுக்கு2

பெயர்ச்சொல்

 • 1

  (தேள், குளவி முதலிய சில உயிரினங்களின்) வளைவான கூரிய நுனியைக் கொண்ட கொட்டும் உறுப்பு.

 • 2

  (நண்டு முதலிய உயிரினங்களின்) இரண்டாக அமைந்திருக்கும், கிடுக்கி போன்ற கால்.

 • 3

  வட்டார வழக்கு சேலைத் தலைப்பின் நுனி; முந்தானை.

  ‘அம்மாவின் கொடுக்கைப் பிடித்துக்கொண்டே குழந்தை திரிகிறது’