தமிழ் கொல்லை யின் அர்த்தம்

கொல்லை

பெயர்ச்சொல்

 • 1

  (வீட்டுக்கு) பின்னால் உள்ள இடம்; புழக்கடை.

  ‘மாட்டைக் கொல்லையில் கட்டு!’
  ‘கொல்லையில் இருக்கும் துளசிமாடம்’
  ‘எங்கள் வீட்டுக் கொல்லையில் ஒரு பெரிய பலா மரம் இருக்கிறது’

 • 2

  (வாழை, தென்னை, கரும்பு முதலியவை பயிரிடும்) தோட்டம்.

 • 3

  வட்டார வழக்கு புன்செய் நிலம்.

  ‘அவருக்குக் கொல்லையே பத்து ஏக்கர் இருக்கிறது’

 • 4

  (முந்திரி, மா போன்ற மரங்கள் நிறைந்த) தோப்பு.

  ‘முந்திரிக் கொல்லை’
  ‘வாழைக் கொல்லை’