கோ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோ1கோ2கோ3

கோ1

வினைச்சொல்கோக்க, கோத்து

 • 1

  (நூல், கம்பி போன்றவற்றை ஒன்றில் இணைப்பதற்காக) நுழைத்தல்.

  ‘ஊசியில் நூலைக் கோக்கக் கிழவர் மிகவும் சிரமப்பட்டார்’

 • 2

  (மணி, காசு போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு) தொடராக இணைத்தல்; தொடுத்தல்.

  ‘தங்கக் காசுகளை மாலையாகக் கோத்து அணிந்திருந்தனர்’
  ‘பண்டிகை என்றால் மாவிலைகளை நாரில் கோத்து வாசலில் கட்டுவார்கள்’

 • 3

  (ஒரு கையின் விரல்களை மற்றொரு கையின் விரல்களுக்கு இடையில் வைத்து அல்லது மற்றொருவரின் விரல்களோடு) பிணைத்தல்; சேர்த்துக்கொள்ளுதல்.

  ‘கைகளைக் கோத்துத் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு பஜனைப் பாடல் பாட ஆரம்பித்தார்’
  ‘நண்பர்கள் இருவரும் கைகோத்து நடந்து சென்றார்கள்’

கோ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோ1கோ2கோ3

கோ2

வினைச்சொல்கோக்க, கோத்து

 • 1

  (வியர்வை, சீழ் முதலியவை) திரள்தல்; (தானியத்தில் பால்) பிடித்தல்.

  ‘புருவங்களின் மீது முத்துமுத்தாக வியர்வைத் துளிகள் கோத்திருந்தன’
  ‘பால் கோத்திருந்த கம்புக் கதிர்களைக் குருவிகள் கொத்திக்கொண்டிருந்தன’

கோ -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

கோ1கோ2கோ3

கோ3

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) பசு.

  ‘கோதானம்’
  ‘கோசாலை’