தமிழ் சக்கை யின் அர்த்தம்

சக்கை

பெயர்ச்சொல்

 • 1

  (கரும்பு, காய்கறிகள் முதலியவற்றிலிருந்து பிழிதல், மெல்லுதல் போன்ற முறையில்) சாறு, சதைப் பகுதி போன்றவற்றை எடுத்த பிறகு எஞ்சியிருப்பது.

  ‘முருங்கைக்காயை மென்று சக்கையைத் துப்பினான்’
  ‘காய்ந்த கரும்புச் சக்கையை அடுப்பெரிக்கப் பயன்படுத்தலாம்’

 • 2

  (பலாப் பழம் போன்றவற்றில்) சுளையை நீக்கியபின் எஞ்சியிருக்கும் பகுதி.

தமிழ் சக்கை யின் அர்த்தம்

சக்கை

பெயர்ச்சொல்

 • 1

  (மரச் சாமான்களில் துளைகளை அடைப்பதற்கு அல்லது இரண்டு பகுதிகளை இணைப்பதற்கு வைக்கும் ஆணி போன்ற) சிறு மரத் துண்டு.

  ‘நிலைக்கான சட்டங்களை இணைத்துச் சக்கை வைத்து இறுக்கினான்’

தமிழ் சக்கை யின் அர்த்தம்

சக்கை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய்.