தமிழ் சங்கம் யின் அர்த்தம்

சங்கம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த) ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.

  ‘கூட்டுறவுச் சங்கம்’
  ‘வியாபாரிகள் சங்கம்’
  ‘மாதர் சங்கம்’

 • 2

  (தமிழ் இலக்கிய வரலாற்றில்) தமிழை வளர்ப்பதற்கு என்று புலவர்களைக் கூட்டி ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

  ‘கடைச் சங்கம் மதுரையில் நிறுவப்பட்டிருந்தது என அறிகிறோம்’