சடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சடை1சடை2சடை3

சீடை1

பெயர்ச்சொல்

 • 1

  பச்சரிசி மாவுடன் தேங்காய், எள் முதலியவை சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்.

சடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சடை1சடை2சடை3

சடை2

வினைச்சொல்சடைய, சடைந்து, சடைக்க, சடைத்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (பிரச்சினை, தகராறு போன்றவற்றை) தீர்த்துவிடுதல்.

  ‘நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையை ஒருமாதிரி சடைந்துவிட்டேன்’
  ‘நீதிமன்றத்துக்குப் போகாமல் பிரச் சினையைச் சடைந்துவிட்டோம்’

சடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சடை1சடை2சடை3

சடை3

வினைச்சொல்சடைய, சடைந்து, சடைக்க, சடைத்து

 • 1

  தலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரளுதல்.

  ‘முடி சடைத்துக் கிடந்தது’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (மரம்) கிளை விடுதல்.

  ‘சடைத்து வளர்ந்திருந்த ஆலமரத்தின் அடியில் சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தனர்’
  ‘வேப்ப மரம் சடைத்து வளர்ந்திருப்பதால் வெக்கையில்லாமல் இருக்கிறது’

சடை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

சடை1சடை2சடை3

சடை

பெயர்ச்சொல்

 • 1

  (பெண்களின்) பின்னப்பட்ட தலைமுடி.

  ‘இரட்டைச் சடை போட்ட பள்ளிச் சிறுமிகள்’

 • 2

  ஒன்றோடொன்று சேர்ந்து திரண்ட முடிக்கற்றை.

  ‘குழந்தைக்கு முடி சடைசடையாக இருக்கிறது; மொட்டையடிக்க வேண்டும்’