தமிழ் சண்டை யின் அர்த்தம்

சண்டை

பெயர்ச்சொல்

 • 1

  (கையாலோ கம்பாலோ ஆயுதத்தாலோ) தாக்கிக்கொள்ளுதல்.

  ‘சிறுவர்கள் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டு சண்டைபோட்டனர்’
  ‘அங்கு நடந்த சண்டையில் ஒருவருக்கு மண்டை உடைந்துவிட்டது’
  ‘துப்பாக்கிச் சண்டையில் நான்கு பேர் பலி’

 • 2

  போர்.

  ‘எல்லைப்புறத்தில் அடிக்கடி சண்டை நிகழ்கிறது’

 • 3

  ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளுதல் அல்லது காரசாரமாகப் பேசிக்கொள்ளுதல்.

  ‘அவள் புருஷனிடம் போட்ட சண்டையைக் கேட்டுப் பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வந்துவிட்டார்கள்’
  ‘எடை குறைவாக இருக்கிறது என்று சொல்லிக் கடைக்காரனிடம் ஒரே சண்டை!’

 • 4

  மனத்தாங்கல்.

  ‘எனக்கும் அவனுக்கும் சண்டை. நாங்கள் பேசிக்கொள்வதில்லை’