தமிழ் சத்தியப்பிரமாணம் யின் அர்த்தம்

சத்தியப்பிரமாணம்

பெயர்ச்சொல்

  • 1

    (நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்பு) உண்மையைப் பேசுவேன் என்று கடவுள் பேரிலோ மனசாட்சியின் பேரிலோ எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி.

    ‘நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள மறுப்பது குற்றமாகக் கருதப்படும்’

  • 2

    அரசு தொடர்பான குறிப்பிட்ட சில பதவிகளை ஏற்கும்போது அல்லது சாரணர் இயக்கம் போன்றவற்றில் சேரும்போது எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி.