தமிழ் சத்து யின் அர்த்தம்

சத்து

பெயர்ச்சொல்

 • 1

  (வளர்ச்சி, இயக்கம் ஆகியவற்றுக்குத் தேவையான மூலப் பொருள்களைக் கொண்ட) ஊட்டம் தரும் பொருள்.

  ‘நீர்ச்சத்து மிகுந்த பழங்கள்’
  ‘சோற்றை வடிக்கும்போது அதன் சத்து முழுவதும் கஞ்சியில் போய்விடுகிறது’
  ‘வாழைத் தண்டில் நார்ச்சத்து அதிகம்’
  ‘மணிச்சத்து’
  ‘தழைச்சத்து’
  ‘கீரையில் இரும்புச்சத்து இருக்கிறது’

 • 2

  (பேச்சு, எழுதப்பட்ட கதை போன்றவற்றில்) பொருள் செறிவு.

  ‘அவருடைய வானொலிப் பேச்சில் சத்தே இல்லை’

 • 3

  திடம்; வலிமை.

  ‘தாத்தாவின் உடலில் சத்தே இல்லை’