தமிழ் சதை யின் அர்த்தம்

சதை

பெயர்ச்சொல்

 • 1

  (உடலில்) தோலுக்குக் கீழ் எலும்பைச் சுற்றியுள்ள கொழுப்பு நிறைந்த மென்மையான பகுதி.

  ‘அடிபட்ட இடத்தில் சதை கன்றிப்போயிருந்தது’

 • 2

  (பழம், தண்டு போன்றவற்றில்) தோலுக்குக் கீழ் அல்லது ஓட்டுக்கு உள்ளே அமைந்திருக்கும் திரட்சியான, மென்மையான பகுதி.

  ‘மாம்பழத்தின் சதையைத் தின்றுவிட்டுக் கொட்டையைத் தூக்கி எறிந்தான்’
  ‘விளாம்பழத்தை உடைத்துச் சதையை எடுத்துத் தின்றாள்’