தமிழ் சந்தர்ப்பவாதம் யின் அர்த்தம்

சந்தர்ப்பவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசியல், கருத்தியல் போன்றவற்றில்) சுயலாபத்துக்காகச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல (ஏற்கனவே ஒருவர் கொண்டிருக்கும் கொள்கை, கருத்து போன்றவற்றுக்கு முரணாக) மாறும் போக்கு.

    ‘போன தேர்தலில் எந்தக் கட்சியை எதிர்த்தார்களோ அதே கட்சியுடன் இப்போது கூட்டணி. சரியான சந்தர்ப்பவாத அரசியல்’
    ‘‘இது சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல, சகோதரர்களின் கூட்டணி’ என்றார் அந்தத் தலைவர்’