தமிழ் சந்தியில் நில் யின் அர்த்தம்

சந்தியில் நில்

வினைச்சொல்நிற்க, நின்று

  • 1

    (அனைத்தையும் இழந்து) ஆதரவற்ற நிலைக்கு உள்ளாதல்.

    ‘அண்ணன் தம்பிகள் சேர்ந்து என் சொத்தை ஏமாற்றிப் பிடுங்கிக்கொண்டதால்தான் இன்று நான் சந்தியில் நிற்கிறேன்’
    ‘இந்த வேலையும் போய்விட்டால் பிறகு சந்தியில் நிற்க வேண்டியதுதான்’