தமிழ் சந்தேகப்படு யின் அர்த்தம்
சந்தேகப்படு
வினைச்சொல்
- 1
(ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவைபற்றி) சந்தேகித்தல்.
‘பணத்தை வேலைக்காரிதான் திருடியிருப்பாள் என்று சந்தேகப்படுவது சரியல்ல’‘நண்பன்மீது அனாவசியமாகச் சந்தேகப்பட்டுவிட்டேன்’ - 2
(செய்த செயலைப் பற்றி அல்லது அறிந்த ஒன்றைப் பற்றி ஞாபகக் குறைவினால்) உறுதியாகக் கூற முடியாத நிலையில் இருத்தல்.
‘பணத்தைப் பையில்தான் வைத்தேனா என்று சந்தேகப்பட்டுப் பையைத் திறந்து பார்த்தேன்’‘எதிரில் வருபவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவரோ என்று சந்தேகப்பட்டு உற்றுப் பார்த்தேன்’