தமிழ் சன்னம் யின் அர்த்தம்

சன்னம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (பொருள்களின் பருமனைக் குறிக்கும்போது) மெல்லியது.

  ‘அரிசி வெண்மையாகவும் சன்னமாகவும் இருக்கிறது’
  ‘சன்னமான தகடு’
  ‘துணி இவ்வளவு சன்னமாக இருக்கிறதே!’

 • 2

  (ஒளி, ஒலி முதலியவற்றைக் குறிக்கும்போது) மெல்லியது; மெதுவானது.

  ‘கண்ணாடி ஜன்னலின் வழியே உள்ளே வந்த சன்னமான ஒளி’
  ‘பாட்டுச் சத்தம் காதில் சன்னமாக விழுந்தது’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு கையெறிகுண்டு அல்லது வெடிகுண்டு வெடிக்கும்போது உள்ளிருந்து சிதறும் உலோகத் தூள்.

  ‘துப்பாக்கிச் சன்னம் காலில் பட்டுக் காலை எடுக்க வேண்டியதாகிவிட்டது’
  ‘ராணுவக் குண்டு வீச்சில் சன்னங்கள் பட்டுப் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’