தமிழ் சப்புக்கொட்டு யின் அர்த்தம்

சப்புக்கொட்டு

வினைச்சொல்-கொட்ட, -கொட்டி

  • 1

    (தின்பண்டம் போன்றவற்றின் ஒரு சிறு துண்டைச் சுவைத்து அல்லது சுவைக்க விரும்பி) நாக்கினால் ஒலி எழுப்பி ருசியின் அருமையை வெளிப்படுத்துதல்.

    ‘சப்புக்கொட்டிச் சாப்பிடுகிற அளவுக்கு ஓட்டல் சாப்பாடு நன்றாக இருக்கிறதா?’

  • 2

    (கிடைக்காததை அல்லது தேவையில்லாததை எண்ணி) ஆசைப்படுதல்; ஏங்குதல்.

    ‘இளமையில் உல்லாசமாக இருந்ததை எண்ணிச் சப்புக்கொட்டிக்கொண்டிருக்கிறாயா?’