தமிழ் சபலம் யின் அர்த்தம்

சபலம்

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றை அடைய வேண்டும் அல்லது அனுபவிக்க வேண்டும் என்ற (தவறான அல்லது பொருந்தாத) ஆசை.

  ‘அந்தப் பெண்ணிடம் அவனுக்குச் சபலம் உண்டாயிற்று’
  ‘சீட்டு ஆட்டம் என்றால் அவனுக்குச் சபலம்’
  ‘இனிப்பு என்றால் தாத்தாவுக்குச் சபலம்தான்’

 • 2

  எதிர்பார்க்கக் காரணம் இல்லை என்றாலும் எதிர்பார்க்கும் மனநிலை.

  ‘அந்த வேலை தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. இருந்தாலும் சபலம் அவனை விடவில்லை’
  ‘நண்பர்கள் கடைசி ரயிலிலாவது வந்துவிட மாட்டார்களா என்ற சபலத்துடன் காத்திருந்தான்’