தமிழ் சமன் செய் யின் அர்த்தம்

சமன் செய்

வினைச்சொல்செய்ய, செய்து

  • 1

    (விளையாட்டுகளில்) ஒரு வீரரோ அணியோ தங்களை எதிர்த்து ஆடுபவர்கள் பெற்ற அதே அளவு புள்ளிகளைப் பெற்று ஆட்டத்தை வெற்றி தோல்வியின்றி முடித்தல்.

    ‘ஜெர்மனி அணி எடுத்த புள்ளிகளை பிரேசில் அணியும் எடுத்து ஆட்டத்தைச் சமன் செய்தது’

  • 2

    ஒரு வீரர் அல்லது அணியினர் வேறொரு வீரர் அல்லது அணியினர் செய்த சாதனைக்குச் சமமான சாதனையைச் செய்தல்.

    ‘டெஸ்ட் போட்டிகளில் 34ஆவது சதம் அடித்ததன்மூலம் கவாஸ்கரின் சாதனையை டெண்டுல்கர் சமன் செய்தார்’