தமிழ் சம்பளம் யின் அர்த்தம்

சம்பளம்

பெயர்ச்சொல்

 • 1

  (மாத, வார அடிப்படையில்) உழைப்புக்குப் பெறும் தொகை; ஊதியம்.

  ‘நீ மாதம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?’

 • 2

  (திரைப்படம், நாடகம், இசைத் துறை போன்றவற்றில்) ஒருவர் தனது பங்களிப்புக்காக அல்லது உழைப்புக்காகப் பெறும் தொகை/(விளையாட்டு வீரர்களுக்குத் தகுதி, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தரப்படும்) ஊதியம்.

  ‘இந்த நடிகர் ஒரு படத்திற்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்’
  ‘ஒவ்வொரு போட்டியிலும் இந்திய வீரர்களுக்குத் தரப்படும் சம்பளத்தில் பெரும் பகுதி விளம்பரதாரர்களிடமிருந்தே பெறப்படுகிறது’
  ‘இந்த இயக்குநர் தனது சம்பளத்தைப் பத்து லட்சத்திலிருந்து இருபது லட்சத்திற்கு உயர்த்திவிட்டார்’
  ‘இந்தக் கரகாட்டக்காரரின் ஒரு நாள் சம்பளம் 250 ரூபாய்’

 • 3

  அருகிவரும் வழக்கு (கல்வி நிறுவனங்களில்) படிப்பதற்குக் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை என்ற வகையில் கட்டும் கட்டணம்.

  ‘கல்லூரிச் சம்பளம் கட்ட இன்று கடைசி நாள்’