தமிழ் சீம்பால் யின் அர்த்தம்

சீம்பால்

பெயர்ச்சொல்

  • 1

    (பசு, எருமை, ஆடு ஆகியவை கன்று ஈன்றவுடன் சுரக்கும்) வெளிர் மஞ்சள் நிறமான பால்.

    ‘சீம்பாலில் பால்கோவா கிளறிச் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்!’

  • 2

    குழந்தை பிறந்த முதல் இரண்டு நாட்களுக்குத் தாயிடம் சுரக்கும் பால்.

    ‘தொற்றுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் சீம்பாலில் நிறைய உள்ளன’