தமிழ் சம்புடம் யின் அர்த்தம்

சம்புடம்

பெயர்ச்சொல்

  • 1

    (விபூதி, சாம்பிராணி முதலியவற்றை வைத்துக்கொள்ளப் பயன்படும்) மூடி போட்ட சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.

    ‘சம்புடத்திலிருந்து விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டார்’

  • 2

    (உணவுப் பொருள்களை வைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் (மூடி போட்ட) வட்ட வடிவப் பாத்திரம்.

    ‘சம்புடத்தில் இருந்த இட்லிகளை எடுத்துத் தட்டில் வைத்தார்’