தமிழ் சமர்ப்பி யின் அர்த்தம்

சமர்ப்பி

வினைச்சொல்சமர்ப்பிக்க, சமர்ப்பித்து

 • 1

  (பரிசீலனை, ஒப்புதல் போன்றவற்றுக்காக அறிக்கை, விண்ணப்பம் முதலியவற்றை) விதிமுறைகளின்படி அதிகாரபூர்வமாக உரியவரிடம் அளித்தல்; முன்வைத்தல்.

  ‘தொழிற்சங்கத் தலைவர்கள் ஆளுநரிடம் கோரிக்கை அடங்கிய மனுவைச் சமர்ப்பித்தார்கள்’
  ‘பாராளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது’
  ‘இந்த ஆண்டின் இறுதிக்குள் பல்கலைக்கழகத்தில் என்னுடைய ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க வேண்டும்’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரைக் கௌரவிக்கும் விதத்தில் அதற்கு அல்லது அவருக்குத் தன்னுடைய) படைப்பை உரித்தாக்குதல்.

  ‘தன் புதிய நாட்டிய நாடகத்தைத் தன் தாய்க்குச் சமர்ப்பித்தார்’

 • 3

  உயர் வழக்கு உரிய மரியாதையுடன் அளித்தல்; ஒப்படைத்தல்.

  ‘இந்தக் கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்துவிடு’